search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "போலி செய்தியால் பாதிப்பு"

    மத்திய அமைச்சர் அமித் ஷா முன்னுரை வாசிக்கும் போது எடுக்கப்பட்ட புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


    மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா முன்னுரையை வாசிப்பது போன்று காட்சியளிக்கும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அமித் ஷா வாசிப்பது போன்று காட்சியளிக்கும் முன்னுரையின் மற்றொரு பக்கத்தில் எதுவும் அச்சிடப்படவில்லை என வைரல் பதிவுகளில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

    இதே புகைப்படத்தை திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் சாகெட் கோக்கலே தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதே பதிவை பலர் பகிர்ந்து வருகின்றனர்.

     ட்விட்டர் ஸ்கிரீன்ஷாட்

    வைரல் புகைப்படத்தை ஆய்வு செய்ததில், அது நவம்பர் 26 ஆம் தேதி பாராளுமன்றத்தில் அரசியலமைப்பு தினம் கொண்டாடப்பட்ட போது எடுக்கப்பட்டது என தெரியவந்துள்ளது. கொண்டாட்டத்தின் போது வழங்கப்பட்ட முன்னுரை ஆங்கிலம் மற்றும் இந்தி மொழிகளில் அச்சிடப்பட்டு இருந்தது. 

    அந்த வகையில், அமித் ஷா வாசித்து கொண்டிருந்த முன்னுரையில் எழுத்துக்கள் இடம்பெறவில்லை என வைரலான தகவல்களில் துளியும் உண்மையில்லை என உறுதியாகிவிட்டது.
    மணிப்பூர் மாநிலத்தில் சமீப நாட்களில் மிக கொடூர தாக்குதல் கடந்த வாரம் நடத்தப்பட்டது. இதில் பலர் உயிரிழந்தனர்.


    மணிப்பூர் மாநிலத்தின் சூரசந்த்பூர் மாவட்டத்தில் நவம்பர் 13 ஆம் தேதி பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் இந்திய ராணுவத்தின் கர்னல், அவரது மனைவி, மகன் மற்றும் மூன்று ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். 

    இந்த தாகுத்தலுக்கு பல்வேறு அரசியல் கட்சிகள் தங்களின் கண்டனத்தை தெரிவித்தன. இத்துடன் அரசியல் தலைவர்களும் கண்டனம் தெரிவித்தனர். இந்த நிலையில், இரண்டு புகைப்படங்கள் மணிப்பூர் தாக்குதலில் எடுக்கப்பட்டதாக கூறி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

     வைரல் பதிவு ஸ்கிரீன்ஷாட்

    இந்த புகைப்படங்களை பல்வேறு வெரிபைடு பக்கங்கள், மத்திய அமைச்சர்கள் பகிர்ந்துள்ளனர். இதில் ஒரு புகைப்படத்தில் ராணுவ வாகனம் எரிந்த நிலையில் சாலையின் ஓரத்தில் நிற்கிறது. இரண்டாவது புகைப்படம் உயிரிழந்த ராணுவ கர்னல் குடும்பத்தினருடன் நிற்கிறார். 

    வைரல் புகைப்படங்களை ஆய்வு செய்ததில் இரண்டு புகைப்படங்களும் சமீபத்திய தாக்குதலின் போது எடுக்கப்படவில்லை என தெரியவந்துள்ளது. புகைப்படத்தில் எரிந்த நிலையில் இருக்கும் ராணுவ வாகனத்தின் புகைப்படம் 2015 ஆம் ஆண்டு பதிவிடப்பட்ட செய்தி தொகுப்பில் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது.
    பிரதமர் நரேந்திர மோடியுடன் நடந்து செல்லும் போது ம.பி. முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் தடுத்து நிறுத்தப்பட்டதாக கூறும் தகவல் வைரலாகி வருகிறது.


    மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் பிரதமர் நரேந்திர மோடியுடன் நடந்து செல்லும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. வைரல் பதிவு தலைப்பில் பிரதமர் மோடியின் பாதுகாவலர் சிவராஜ் சிங் சவுகானை தடுத்து நிறுத்தினார் என குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

    வைரல் பதிவு குறித்த இணைய தேடல்களில், வீடியோவில் சிவராஜ் சிங் சவுகானுடன் பேசிய போபால் மாவட்ட கலெக்டர் அவினாஷ் லாவினா வைரல் பதிவுகளில் உண்மையில்லை என தனியார் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்து இருக்கிறார். மேலும் கலெக்டர் அவினாஷை பிரதமரின் பாதுகாவலர் என வைரல் பதிவுகளில் குறிப்பிட்டுள்ளனர்.

     வைரல் வீடியோ ஸ்கிரீன்ஷாட்

    பிரதமர் நரேந்திர மோடி நவம்பர் 15 ஆம் தேதி மத்திய பிரதேச மாநிலத்திற்கு சென்று இருந்தார். அங்கு பிர்சா முண்டா பிறந்த நாள் விழா கொண்டாட்டத்தில் பங்கேற்ற பிரதமர் மோடி பழங்குடியினர் வளர்ச்சி திட்டங்களை துவங்கி வைத்தார். இந்த நிகழ்வுகளின் போது எடுக்கப்பட்ட வீடியோவே தவறான தலைப்பில் வைரலாகி வருகிறது.

    நீட்டா அம்பானி குடிக்கும் குடிநீரின் விலை குறித்து சமூக வலைதளங்களில் வைரலாகும் தகவல் பற்றி பார்ப்போம்.


    ரிலையன்ஸ் பவுண்டேஷன் தலைவர் நீட்டா அம்பானியின் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இவர் உலகின் விலை உயர்ந்த குடிநீரை குடிப்பதாக வைரல் பதிவுகளில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது. 

    ஜூலை 6, 2021 ஆம் ஆண்டு வெளியான ஜி.கியூ. இந்தியா அறிக்கையின் படி 'அக்வா டி க்ரிஸ்டாலோ டிரிபியூடோ அ மோடிகிலானி' என்ற பெயர் கொண்ட குடிநீர் பாட்டில் ஒன்றின் விலை ரூ. 44.5 லட்சம் ஆகும். இது 2010 ஆம் ஆண்டு உலகின் விலை உயர்ந்த குடிநீர் என கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம்பிடித்தது. 

     வைரல் படம்

    நீட்டா அம்பானி உலகின் விலை உயர்ந்த குடிநீரை குடிக்கிறார். இதன் விலை ஒரு பாட்டிலுக்கு ரூ. 40 லட்சம் ஆகும். தன்னை ஆரோக்கியமாகவும், புத்துணர்ச்சியுடனும் வைத்துக் கொள்ள நீட்டா அம்பானி குடிக்கும் நீர் 750 மில்லி லிட்டர் விலை ரூ. 40 லட்சம் ஆகும். என வைரல் பதிவுகளில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

    வைரல் புகைப்படத்தை ஆய்வு செய்ததில், அது எடிட் செய்யப்பட்ட புகைப்படம் என தெரியவந்துள்ளது. உண்மையில் நீட்டா அம்பானி பிளாஸ்டிக் பாட்டில் குடிநீரையே குடிக்கிறார். இதன் அசல் புகைப்படம் இணையத்தில் கிடைக்கிறது. உண்மையில் உலகின் விலை உயர்ந்த குடிநீர் இந்திய மதிப்பில் ரூ. 39.40 லட்சம் விலைக்கு 2010 ஆம் ஆண்டு ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டது.

    வைர வியாபாரி நிரவ் மோடி காங்கிரஸ் கட்சிக்கு கமிஷன் கொடுத்ததாக கூறி வைரலாகும் தகவல் பற்றி தொடர்ந்து பார்ப்போம்.
     

    பிரபல வைர வியாபாரி நிரவ் மோடி காங்கிரஸ் கட்சி தலைவர்கள் வற்புறுத்தியதால் தான் நாட்டை விட்டு ஓடியதாக லண்டன் நீதிமன்றத்தில் தெரிவித்ததாக கூறும் தகவல் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. காங்கிரஸ் கட்சிக்கு நிரவ் மோடி ரூ. 456 கோடி கமிஷனாக வழங்கியதாக நீதிமன்றத்தில் வாக்குமூலம் அளித்ததார் என வைரல் பதிவுகளில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

    வைரல் பதிவுகளை ஆய்வு செய்ததில், நிரவ் மோடி கூறியதாக வலம்வரும் தகவல்களில் துளியும் உண்மையில்லை என தெரியவந்துள்ளது. முன்னதாக நிரவ் மோடி ஊழலில் பா.ஜ.க. கட்சிக்கும் தொடர்பு இருப்பதாக கூறும் தகவலும் சமூக வலைதளங்களில் வைரலானது.

     நிரவ் மோடி

    பஞ்சாப் நேஷனல் வங்கி மோசடி வழக்கில் சிக்கிய நிரவ் மோடி 2018 ஜனவரி மாத வாக்கில் நாட்டை விட்டு தப்பி சென்றார். பின் மார்ச் 16, 2019 ஆம் ஆண்டு இவர் லண்டனில் கைது செய்யப்பட்டார். இவரது கைதை தொடர்ந்து இவர் கூறியதாக பல்வேறு தகவல்கள் சமூக வலைதளங்களில் அவ்வப்போது வைரலாகி வருகின்றன.

    அந்த வகையில் நிரவ் மோடி காங்கிரஸ் கட்சிக்கு கமிஷன் கொடுத்ததாக வாக்குமூலம் அளித்தார் என கூறி வைரலாகும் தகவலில் துளியும் உண்மையில்லை என உறுதியாகிவிட்டது.
    விண்வெளியில் இருந்து எடுக்கப்பட்டதாக கூறி அசத்தலான புகைப்படம் வைரலாகி வருகிறது.

    விண்வெளியில் இருந்தபடி நாசா எடுத்ததாக கூறி புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. பூமியில் சூரிய மறைவு விண்வெளியில் இப்படித் தான் காட்சியளிக்கும் என வைரல் பதிவுகளில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது. 

    வைரல் புகைப்படம் குறித்த இணைய தேடல்களில் அது விண்வெளியில் இருந்து பூமியில் ஏற்படும் சூரிய மறைவின் போது எடுக்கப்படவில்லை என தெரியவந்துள்ளது. உண்மையில் இது விண்வெளியில் இருந்தபடி பூமியில் ஏற்படும் சூரிய உதயத்தின் காட்சி ஆகும். மேலும் இது புகைப்படம் அல்ல. கணினியில் உருவாக்கப்பட்ட படம் ஆகும். 

     வைரல் ஸ்கிரீன்ஷாட்

    இதே படம் 2021, செப்டம்பர் 22 ஆம் தேதி ரெடிட் தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டு இருக்கிறது. இது கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் வீடியோவில் இருந்து எடுக்கப்பட்ட ஸ்கிரீன்ஷாட் ஆகும். இந்த வீடியோவின் இணைய முகவரியும் பகிரப்பட்டு இருக்கிறது. அந்த வகையில் வைரல் புகைப்படம் விண்வெளியில் இருந்து எடுக்கப்படவில்லை என உறுதியாகிவிட்டது. 
    பாகிஸ்தான் கிரிக்கெட் அணி வீரர் ஹசன் அலி வீடு தாக்கப்பட்டதாக கூறி தகவல் ஒன்று வைரலாகி வருகிறது.


    ஐ.சி.சி. டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் அரையிறுதி போட்டியில் பாகிஸ்தான் மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதின. பரபரப்பாக நடைபெற்ற போட்டியில் ஆஸ்திரேலியா அணி அபார வெற்றி பெற்றது. பாகிஸ்தான் அணி தோல்விக்கு அந்நாட்டு வீரர் ஹசன் அலி தவற விட்ட கேட்ச் தான் காரணம் என கடும் விமர்சனம் எழுந்தது.

    இந்த நிலையில், உடைந்த கண்ணாடி கொண்ட வீடு ஒன்றின் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த புகைப்படத்தில் இருப்பது பாகிஸ்தான் கிரிக்கெட் அணி வீரர் ஹசன் அலியின் வீடு என்றும், அரையிறுதி போட்டியில் தோல்வியடைந்ததை தொடர்ந்து மர்ம நபர்கள் வீட்டின் மீது கல்வீசி தாக்குதல் நடத்தினர் என்றும் வைரல் பதிவுகளில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது. இத்துடன் தாக்குதலை தொடர்ந்து வீட்டிற்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.

     வைரல் புகைப்படம்

    இதுகுறித்த இணைய தேடல்களில் வைரல் பதிவுகளில் துளியும் உண்மையில்லை என தெரியவந்துள்ளது. ஹசன் அலி குடும்பத்தார் மற்றும் பாகிஸ்தானை சேர்ந்த செய்தியாளர்கள் தரப்பில் இருந்து ஹசன் அலி வீட்டின் மீது எந்த தாக்குதலும் நடத்தப்படவில்லை என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. உண்மையில் புகைப்படத்தில் உள்ள வீடு கர்நாடகா மாநிலத்தில் இருக்கிறது.
    ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணிக்கு இவர் விளம்பரதாரர் என கூறும் தகவல் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


    டி20 கிரிக்கெட் உலக கோப்பை தொடரில் ஆப்கானிஸ்தான் அணி நான்கு போட்டிகளில் இரு வெற்றிகளுடன் புள்ளி பட்டியலில் இரண்டாம் இடத்தில் உள்ளது. ஸ்காட்லாந்து மற்றும் நமீபியா அணிகளை வீழ்த்தியதன் மூலம் ஆப்கானிஸ்தான் இரண்டாம் இடத்தை பிடித்து இருக்கிறது.

    இந்த நிலையில், ஆப்கானிஸ்தான் டி20 கிரிக்கெட் அணிக்கு விளம்பரதாரர் ஆக தலிபான் மறுத்துவிட்டதாக கூறும் தகவல் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. தற்போது டி20 உலக கோப்பை தொடரில் பங்கேற்க ஆப்கானிஸ்தான் அணியின் விளம்பரதாரர் பொறுப்பை அந்த அணியின் கேப்டன் மொகமது நபி ஏற்று இருப்பதாக வைரல் பதிவுகளில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

     மொகமது நபி

    வைரல் பதிவுகளை ஆய்வு செய்ததில், செடிகி க்ருப் - ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணிக்கான விளம்பரதாரர் என தெரியவந்துள்ளது. ஆப்கன் அணி விளம்பரதாரர் பற்றிய கேள்விக்கு வைரல் தகவல்களில் உண்மையில்லை என மொகமது நபி தெரிவித்தார். அந்த வகையில் ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி விளம்பரதாரர் பற்றி வைரலான தகவலில் துளியும் உண்மையில்லை என உறுதியாகிவிட்டது.
    டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணி தொடர் தோல்வி அடைந்ததை தொடர்ந்து இளைஞர் ஒருவரின் புகைப்படம் வைரலாகி வருகிறது.
     

    பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகளுடனான தொடர் தோல்வி காரணமாக டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் இருந்து வெளியேறும் நிலையில் இந்திய அணி உள்ளது. இதன் காரணமாக இந்திய கிரிக்கெட் அணி ரசிகர்கள் கேப்டன் விராட் கோலி தலைமையிலான இந்திய அணி மீது ஏமாற்றத்தில் உள்ளனர்.

    இந்த நிலையில், உத்தர பிரதேச மாநிலத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர் தொலைக்காட்சி பெட்டியை தூக்கி வீசியதாக கூறி புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 17 வயதான இளைஞர் தனது வீட்டில் இருந்த 4 டிவிக்களை தூக்கி வீசியதாக வைரல் பதிவுகளில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

     வைரல் பதிவு ஸ்கிரீன்ஷாட்

    வைரல் பதிவுகளை ஆய்வு செய்ததில், புகைப்படம் 2017 ஆம் ஆண்டு எடுக்கப்பட்டது என தெரியவந்துள்ளது. இந்த புகைப்படம் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்தியா பாகிஸ்தானிடம் தோல்வியுற்றதை தொடர்ந்து இளைஞர் தொலைக்காட்சியை தூக்கி வீசிய போது எடுக்கப்பட்டது ஆகும். 

    அந்த வகையில் வைரல் புகைப்படத்திற்கும் சமீபத்திய டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடருக்கும் எந்த தொடர்பும் இல்லை என உறுதியாகிவிட்டது.
    கன்னட சூப்பர்ஸ்டார் புனித் ராஜ்குமார் உயிரிழக்க இதுதான் காரணம் என மருத்துவர் கூறியதாக வைரலாகும் தகவல் பற்றி தொடர்ந்து பார்ப்போம்.


    கன்னட சூப்பர்ஸ்டார் புனித் ராஜ்குமார் அக்டோபர் 29 ஆம் தேதி மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். இவரது மரணம் திரையுலகினர் மட்டுமின்றி அனைவர் மத்தியிலும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. புனித் ராஜ்குமார் உயிரிழக்க இரண்டு மணி நேர கடுமையான உடற்பயிற்சி தான் காரணம் என கூறப்படுகிறது.

    இந்த நிலையில், பிரபல இதயவியல் நிபுணர் மருத்துவர் தேவி ஷெட்டி கூறியதாக பகீர் தகவல் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. வைரல் பதிவுகளில், கட்டுக்கோப்பாக இருக்க அதிகளவு மெனக்கெடுதல் தான் புனித் ராஜ்குமார் உயிரிழக்க காரணம் என குறிப்பிடப்பட்டு இருக்கிறது. வைரல் தகவல் வாட்ஸ்அப் மற்றும் பேஸ்புக்கில் பகிரப்பட்டு வருகிறது.

     வைரல் ஸ்கிரீன்ஷாட்

    இதுகுறித்த இணைய தேடல்களில், வைரல் தகவலை மருத்துவர் தேவி ஷெட்டி வெளியிடவில்லை என தெரியவந்துள்ளது. வைரல் பதிவுகளை தொடர்ந்து நாரயணா ஹெல்த் குழுமம் சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டது. அதில் மருத்துவர் தேவி ஷெட்டி நடிகர் புனித் ராஜ்குமார் மறைவு குறித்து இதுபோன்ற தகவலை பதிவிடவில்லை என குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

    முன்னதாக மருத்துவர் தேவி ஷெட்டி தொலைகாட்சி விவாதம் ஒன்றில் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் ராஜ்குமார் மறைவு குறித்து எந்த கருத்தையும் தெரிவிக்க மாட்டேன் என தெரிவித்துவிட்டார். அந்த வகையில் மருத்துவர் தேவி ஷெட்டி வெளியிட்டதாக வைரலாகும் தகவலை அவர் வெளியிடவில்லை என்பது உறுதியாகிவிட்டது.
    இத்தாலி சென்று இருக்கும் பிரதமர் நரேந்திர மோடி அந்நாட்டு டாக்சியில் பயணிக்க வைக்கப்பட்டதாக கூறி புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.


    பிரதமர் நரேந்திர மோடி ஜி20 மாநாட்டில் கலந்து கொள்ள இத்தாலியில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார். ஐந்து நாள் பயணமாக இத்தாலி சென்று இருக்கும் பிரதமர் மோடி அக்டோபர் 30 ஆம் தேதி போப் பிரான்சிஸ்-ஐ சந்தித்து பேசினார். 

    இதனிடையே பிரதமர் நரேந்திர மோடியை டாக்சியில் பயணிக்க வைத்ததாக கூறி புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. புகைப்படத்தில் பிரதமர் மோடி டாக்சி லோகோ இடம்பெற்று இருக்கும் கார்களின் அருகில் நிற்கிறார். 

     ட்விட்டர் ஸ்கிரீன்ஷாட்

    வைரல் புகைப்படத்தை ஆய்வு செய்ததில், அது எடிட் செய்யப்பட்ட ஒன்று என தெரியவந்துள்ளது. இதே புகைப்படங்கள் முன்னணி செய்தி நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்திலும் வெளியாகி இருக்கிறது. அதன்படி வைரல் புகைப்படங்கள் எடிட் செய்யப்பட்டவை என உறுதியாகிவிட்டது.
    2019 இந்திய பொது தேர்தலில் சில பா.ஜ.க. வேட்பாளர்கள் ஒரே அளவு வாக்குகளை பெற்றதாக சமூக வலைதளத்தில் தகவல் ஒன்று வைரலாகியுள்ளது.



    இந்தியாவில் சமீபத்தில் நடந்து முடிந்த 2019 பொது தேர்தலில் பா.ஜ.க. வேட்பாளர்கள் சிலர் 2,11,820 வாக்குகளையும் காங்கிரஸ் கட்சி வேட்பாளர்கள் சிலர் 1,40,295 வாக்குகளும் பெற்றதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவி வருகிறது. இந்த தகவல் அடங்கிய பதிவுடன் வாக்குப்பதிவு இயந்திரம் ஹேக் செய்யப்படாமல், இப்படி ஒரே அளவிலான வாக்குகளை பெறுவது எப்படி சாத்தியம் என்ற கேள்வியும் இடம்பெற்றிருக்கிறது.



    சமூக வலைதளங்களில் வைரலாகும் பதிவில் ஏழு பா.ஜ.க. வேட்பாளர்கள் ஒரே அளவு வாக்குகளை பெற்றதாக அவர்களின் பெயர்களுடன் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், காங்கிரஸ் வேட்பாளர்கள் பெற்ற ஒரே அளவு வாக்குகளின் எண்ணிக்கை மட்டும் பதிவிட்டு அவர்களின் பெயர் பதிவிடப்படவில்லை. 



    இதில் குறிப்பிடத்தக்க அம்சம் ஏழு பா.ஜ.க. வேட்பாளர்கள் சரியாக 2,11,820 வாக்குகளையும், காங்கிரஸ் வேட்பாளர்கள் 1,40,295 வாக்குகளை பெற்றிருப்பதாக பதிவிடப்பட்டுள்ளது. 

    வைரல் பதிவின் படி ஏழு பா.ஜ.க. வேட்பாளர்கள் பெற்ற உண்மையான வாக்குகளை தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ வலைதளத்தில் பார்க்க முடிந்தது. அதில் அவர்கள் பெற்ற வாக்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.



    போலா சிங்: 6,77,196
    மேனகா காந்தி: 4,58,281
    உபேந்திரா நர்சிங்: 5,35,594
    ஹரிஷ் திவேதி: 4,69,214
    சத்யபதி சிங்: 5,19,631
    சங் மித்ரா மவுரியா: 5,10,343
    குன்வர் பாரதேந்திரா சிங்: 4,88,061

    தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ வலைதளத்தின் படி சமூக வலைதளங்களில் பகிரப்படும் பா.ஜ.க. வேட்பாளர்களின் வாக்கு விவரங்கள் எதுவும் உண்மையில்லை என உறுதியாகி இருக்கிறது.
    ×